'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை' ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
x
தினத்தந்தி 21 Nov 2023 12:55 AM GMT (Updated: 21 Nov 2023 12:55 AM GMT)

தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு,

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: "காவிரி பிரச்சினையைப் பொறுத்துவரை எப்படி நமக்கு வயிற்றுப் பிரச்சினையாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகாவுக்கும் உள்ளது. எனவே, இப்பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆணையத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, முன்னாள் தலைவர், மூத்த தலைவர் என்று அழைத்து வந்த நிலையில், தற்போது முடிந்துபோன தலைவர் என்று அழைக்கிறார்கள்" என்றார்.


Next Story