எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி


எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
x

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது.

மதுரை,

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிப்பூரில் நடைபெறும் மதக்கலவரம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அங்கு மனித உரிமைகள் நிறைய நடக்கிறது. மெய்தி எனும் இந்து சமுதாயம் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். மாற்று சமுதாயத்தினர் அவர்களை முந்த முயற்சிக்கிறார்கள். பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை. பிரதமர் உடனே போய் கலவரத்தை அடக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து வந்தால் ஒற்றுமையாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை. கோவில்கள் அனைத்தும் வெளிவர முயற்சி செய்து கொடுத்தோம். ஜாதி, மதம் மற்றும் அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்தோம்.

இந்து ஒற்றுமைக்காக பா.ஜனதாவுக்கு ஓட்டு கிடைக்கும். பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள். வெள்ளைக்காரர்கள், முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டு சென்றனர். அதை மீட்பதற்கும், மறுமலர்ச்சி ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது. அதற்காக நமக்கு ஓட்டு கிடைக்கும்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க பெயர் வைக்காதது எனக்கு மிகவும் வருத்தம். இன்றைக்கு ஆட்சியில் இருந்தாலும் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. யாரும் ஆதரிக்கவில்லை. இவர்கள் கடிதம் கொடுத்தால் நாடாளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஆனால் இங்கு ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story