தானியங்கி மது விற்பனை இயந்திரம்.. மூடாவிட்டால் - அன்புமணி ராமதாஸ் கடும் எச்சரிக்கை.!

தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை மூட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தானியங்கி மது விற்பனை இயந்திரம்.. மூடாவிட்டால் - அன்புமணி ராமதாஸ் கடும் எச்சரிக்கை.!
Published on

சென்னை,

தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான கடைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, பணம் செலுத்தி மதுபானத்தை பெற்றுக் கொள்ளும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தானியங்கி மது விற்பனைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்களை வைத்தால் திமுகவிற்கு மோசமான பெயர் தான் வரும் என்று கூறினார்.

தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அரசு மூட வேண்டும் என்று கூறிய அவர், மூடாவிட்டால் பாமக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com