இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் மத்திய அரசை பாராட்டுவோம்


இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் மத்திய அரசை பாராட்டுவோம்
x

இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்தால் மத்திய அரசை பாராட்டுவோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர்முகைதீன் தெரிவித்தார்.

விருதுநகர்


இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்தால் மத்திய அரசை பாராட்டுவோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர்முகைதீன் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம்

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-

பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் பா.ஜ.க. அரசு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. எனவே அது பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் அதனை எதிர்த்து போராடுவோம்.

இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வர இருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது ஏற்புடையதல்ல. கர்நாடகாவில் இப்படித்தான் தெரிவித்தார்கள். ஆனால் பா.ஜ.க.தோல்வி அடைந்துள்ளது. இதை கருத்து கணிப்பு என்று கூற முடியாது. கருத்து திணிப்பு தான்.

பலத்த எதிர்ப்பு

பா.ஜ.க.விற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. எனவே இந்த கருத்துக்கணிப்பு உண்மையாக வாய்ப்பில்லை. தமிழக அரசு பெண்களுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ரேஷன் கார்டுகளில் அரிசி வாங்குவோருக்கு தான் இந்த உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாரேனும் விடுபட்டிருந்தால் அது பற்றி அரசுக்கு சுட்டிக்காட்டுவோம். அதை அரசு திருத்தம் செய்து உறுதியாக நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு அமெரிக்க டாலரை போல உலக அளவில் அனைத்து நாடுகளிலும் இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது. இதன் அடிப்படையில் இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து நாடுகளிலும் உயரும் நிலை ஏற்பட்டால் அதற்காக மத்திய அரசை பாராட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

1 More update

Next Story