ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சிக்கு வர முடியும்-சுப்பிரமணியசாமி பேட்டி


ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சிக்கு வர முடியும்-சுப்பிரமணியசாமி பேட்டி
x

ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சிக்கு வர முடியும் என்று மதுரையில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.

மதுரை

ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சிக்கு வர முடியும் என்று மதுரையில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.

மதுரை வருகை

பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. ஆனால், மத கலவரம் நடக்கும் மணிப்பூருக்கு செல்லவில்லை. பிரதமர் உடனடியாக அங்கு சென்று கலவரத்தை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில், ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது.

நரேந்திரமோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை. இந்து ஒற்றுமைக்காக பா.ஜனதாவுக்கு ஓட்டு கிடைக்கும். பிரதமர் மோடி நல்லது செய்தார் என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. அப்போதைய மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் இதுகுறித்து என்னிடம் கூறினார். மதுரை விமான நிலைய திறப்பு விழா சமயத்தில் மேடையில் பிரபுல் பட்டேல் அறிவிக்க இருந்த நேரத்தில் தடுத்து விட்டனர். முத்துராமலிங்க தேவர் நாட்டின் விடுதலைக்காக போராடினார். மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் வைக்காதது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story