குண்டர் சட்டத்தில் பெண் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் பெண் சிறையில் அடைப்பு
x

குண்டர் சட்டத்தில் பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரியலூர்


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, தா.பழூர் அருகே சுத்தமல்லி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னையன் மனைவி சரஸ்வதி(வயது 49). இவர் கடந்த 3-ந்தேதி மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தபோது தா.பழூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருச்சி மகளிர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சரஸ்வதி இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இவர் மீது ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். அதன்படி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவின்படி சரஸ்வதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நேற்று இதற்கான ஆணை திருச்சி மகளிர் தனிச்சிறையில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story