கம்பம் நகராட்சியில்வரி பாக்கியை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்:ஆணையர் எச்சரிக்கை


கம்பம் நகராட்சியில்வரி பாக்கியை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்:ஆணையர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:47 PM GMT)

கம்பம் நகராட்சியில் வரி பாக்கிைய செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பபு துண்டிக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

தேனி

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு ஆண்டுக்கு 2 முறை வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் நிலுவையில் உள்ளது. இந்த வரி பாக்கியை பொதுமக்கள் வருகிற 14-ந்தேதிக்குள் நகராட்சி கணினி வரி வசூல் மையத்தில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கைகளுடன் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கம்பம் நகராட்சி ஆணையர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story