நாகையில், நெய்தல் கோடை விழா

நாகையில், நெய்தல் கோடை விழா நாளை தொடங்குகிறது.
நாகையில், நெய்தல் கோடை விழா
Published on

நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நெய்தல் கோடை விழா புதிய கடற்கரையில் நாளை(சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் தோட்டக்கலை, மாசுகட்டுப்பாட்டுவாரியம், சமுகநலத்துறை, காவல்துறை (ம) போக்குவரத்துத்துறை, வாழ்ந்துக் காட்டுவோம் திட்டம் மகளிர் திட்டம், மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய பல்வேறுதுறைகள் மூலம் விழிப்புணர்வு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. எனவே, நாகை மாவட்ட பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com