நாசரேத்தில்இளம்பெண் தற்கொலை

நாசரேத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நாசரேத்தில்இளம்பெண் தற்கொலை
Published on

நாசரேத்:

நாசரேத் - வாழையடியை சேர்ந்த அருமை நாயகம் மகன் ஜெபஸ்டின். இவரது மனைவி அருள் மரிய ஜென்சி (வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு செய்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் மரிய ஜென்சி திருப்பூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவரது தந்தை சமாதானம் சய்து, பேசி கணவரிடம் குழந்தையுடன் விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 11-ந் ததி மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அருள் மரிய ஜென்சி வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் விசாரணை நடத்தி, கணவர் ஜெபஸ்டின் மற்றும் அவரது தாயார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com