பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் அனுசரிப்பு


தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளையொட்டி, கோட்டையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கட்டபொம்மன் நினைவு நாள்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் 224-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

அங்குள்ள வீரசக்கதேவி கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வீரபாண்டி கட்டபொம்மன் உருவச்சிலைக்கு பாலாபிஷேகம், தீபாரதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அரசு சார்பில் மரியாதை

தொடர்ந்து அரசு சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் குழுத்தலைவர் முருகபூபதி தலைமையில் வீரசக்கதேவி கோவில் குழு செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்புராஜ் சௌந்தர், துணைத் தலைவர்கள் முருகேசன், வேல்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து கட்டபொம்மன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story