சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.472-க்கு விற்பனை


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.472-க்கு விற்பனை
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.472-க்கு விற்பனையானது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.472-க்கும், முல்லை ரூ.300-க்கும், காக்கடா ரூ.365-க்கும், செண்டுமல்லி ரூ.74-க்கும், பட்டுப்பூ ரூ.90-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story