சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு ஏலம் போனது.
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.490-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.825-க்கும், செண்டுமல்லி ரூ.55-க்கும், பட்டுப்பூ ரூ.69-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story