திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்


திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 4:29 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவையும், திருச்செந்தூர் வட்ட பேரவையும் இணைந்து திருச்செந்தூர் விஸ்வகர்மா மடத்தில் பேரவை கூட்டத்தை நடத்தின. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அய்யாகுட்டி தலைமை தாங்கினார். வட்ட தலைவர் பாலசிங் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவ ஆழ்வார் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கலிலூர் ரஹ்மான் மாவட்ட அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வரவு,செலவு அறிக்கையையும் வாசித்தனர். வட்டக்கிளை அறிக்கையை செயலாளர் மணியனும், வட்டக்கிளை வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் கல்யாணியும் வாசித்தனர். திருச்செந்தூர் கூட்டுறவு நிலவள வங்கி முன்னாள் தலைவர் விஜயராகவன், வட்ட செயலாளர்கள் அப்துல் ஜாபர், சுப்பையா, வட்ட பொருளாளர் பால்துறை ஆகியோர் தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்ட துணை தலைவர் பிரேம்குமார் நன்றி கூறினார்.


Next Story