தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பழைய பஸ்நிலையம் விரைவில் திறக்கப்படும்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பழைய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பழைய பஸ்நிலையம் விரைவில் திறக்கப்படும்
Published on

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பழைய பஸ்நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்தார்.

பஸ் நிலையம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையம் கட்டுமான பணிகள் பெருமளவில் முடிவடைந்து உள்ளன. இதனால் இந்த பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. இந்த மாதத்துக்குள் திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் திறப்பு

இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதிகட்ட பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். அவர் பஸ்கள் நிறுத்தப்படக்கூடிய இடம், பயணிகள் அமரும் பகுதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், கவுன்சிலர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இது குறித்து மேயர் கூறும் போது, பழைய பஸ்நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com