கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் தொடக்க நிகழ்ச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் தொடக்க நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவகர்லால், மணிகண்டன் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பெண் குழந்தைகளை கண் இமைபோல் பாதுகாக்க இமைகள் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலா 50 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பெண் குழந்தைகளிடம் பெண் போலீசார் நட்பாக பழகி அவர்களுக்கு பொதுவெளியில் அல்லது பள்ளிகளில் ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என அறிந்து கொள்ளவேண்டும்.

ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதை போலீசார் அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடையே தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை கண் இமைபோல் காக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டுகள், அனைத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story