தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரிப்பு


தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுவதால், தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுவதால், தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.

வறட்சியான காலநிலை

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வறண்ட காலநிலை நிலவி வருகிறது. இதில் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உறைபனி மற்றும் நீர்பனி பொழிவு காரணமாகவும், மேகமூட்டத்துடன் நிலவிய காலநிலை காரணமாகவும் தேயிலை தோட்டங்களில் உள்ள கொழுந்துகள் கருகின. மேலும் ஒரு சில தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் ஏற்பட்டது. இதனால் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பகல் நேரத்தில் கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலையால், தோட்டங்களில் ஈரப்பதம் வெகுவாக குறைந்து வருகிறது.

சிவப்பு சிலந்தி தாக்குதல்

இதன் காரணமாக கீழ் கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் செடிகளை சிவப்பு சிலந்தி நோய் அதிகளவில் தாக்க தொடங்கி உள்ளது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து வருதுடன், பச்சை தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வழங்கும் பச்சை தேயிலை வழக்கத்தைவிட குறைந்து உள்ளது. மேலும் மகசூல் குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் தங்களது தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு வெட்டாசெல் மற்றும் சல்பர் ஆகியவை கலந்த கலவையை தண்ணீருடன் சேர்த்து ஸ்பிரிங்ளர் மற்றும் தெளிப்பான்கள் மூலம் தெளித்து வருகின்றனர். மருந்து தெளித்தாலும், மழை பெய்து வறட்சியின் தாக்கம் குறைந்தால் மட்டுமே, நோயின் தாக்கம் குறைந்து, பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story