இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர் ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் முத்துராஜன், மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், மாநகர தலைவர் ஜஸ்டின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சீத்தாலட்சுமி, பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூதலூர் ஒன்றிய தலைவர் திருமாறன் வரவேற்றார்.

மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில், ஏழை-எளிய, நடுத்தர மக்கள் மற்றும் சிறு, குறு தொழில்களை பாதிக்கின்ற மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். குறுவை பயிர் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,

திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களை மழைக்காலத்தில் இருந்து பாதுகாத்திடுவதுடன், நெல்விளைச்சலுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும். அனைத்து தரப்பினரையும் பாதிக்கின்ற நாள்தோறும் ஏறிவரும் விலைவாசியை கட்டுப்படுத்திட வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியை கைவிட வேண்டும்

அரிசி, தயிர், பால் உள்ளிட்ட அன்றாட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட வேண்டும். தஞ்சாவூர் பிரதான வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வடிகால்கள் சீர் செய்யப்படாமல் உள்ளது. மழைக்காலம் வருவதை கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் வடிகால் வாய்க்கால்களை சரி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் டோமினிக் நன்றி கூறினார்.


1 More update

Next Story