தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழிற்சாலைகள் இன்று அடைப்பு


தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழிற்சாலைகள் இன்று அடைப்பு
x
தினத்தந்தி 24 Sep 2023 7:00 PM GMT (Updated: 24 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் சார்பில் இன்று தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும். இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


Next Story