ரேஷன்கடை காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு

ரேஷன்கடை காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அதிகாரி தெரிவித்தார்.
ரேஷன்கடை காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு
Published on

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளரும், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவருமான ஜினு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் ரேஷன்கடைகளில் காலியாக உள்ள 91 விற்பனையாளர் பணியிடங்கள், 12 கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வரும் 14-ந் தேதி முதல் தொடங்கி 23-ந் தேதி வரை சிவகங்கை கலெக்டர் அலுவகம் நுழைவு வாயில் எதிரே உள்ள மகாலில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகளை கடந்த 3-ந் தேதி முதல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம் http://www.drbsvg.net வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தகுதியுள்ள 8 ஆயிரத்து 54 விண்ணப்பதாரர்களில் இதுவரை 4 ஆயிரத்து 509 பேர் மட்டுமே ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். பதிவிறக்கம் செய்யாத விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com