மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் காயம்

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் காயம்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்த ரவி மகன் தனுஷ் (வயது 12). இவர் தனது சைக்கிளில் பழுது நீக்குவதற்காக காளிப்பேட்டைக்கு சென்று விட்டு திரும்ப எலந்தகொட்டப்பட்டிக்கு வந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் தனுஷ் மீது மோதியது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com