"மயிலாப்பூர் சந்தையில் காய்கறி விலையை விசாரித்தால் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது" - ப.சிதம்பரம்

காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
"மயிலாப்பூர் சந்தையில் காய்கறி விலையை விசாரித்தால் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது" - ப.சிதம்பரம்
Published on

திருப்பூர்,

தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் காய்கறி விலை குறித்து விசாரித்தார். பின்னர் ஒரு சில காய்கறிகளை வாங்கிய அவர் அங்கு காய்கறி வாங்க வந்தவர்களிடம் கலந்துரையாடினார். இது தொடர்பான வீடியோவை நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான காலம் என்று சொல்ல முடியாது என்றும் கூறினார்.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு பணவீக்கம் காரணமாக விலைவாசி உயரும் என்பதை ரிசர்வ் வங்கி கவர்னரே ஒப்புக்கொள்கிறார் என்று குறிப்பிட்ட அவர், மயிலாப்பூர் சந்தையில் சென்று காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்காது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com