தர்மபுரி அருகே நெல் மூட்டைகள் மாயமான கிடங்கில்குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் அதிகாரிகள் ஆய்வு


தர்மபுரி அருகே நெல் மூட்டைகள் மாயமான கிடங்கில்குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 1 Jun 2023 5:00 AM GMT (Updated: 1 Jun 2023 7:08 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல் பரவியது. இது தொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி.காமினி உத்தரவுப்படி கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, சேலம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதியமான்கோட்டை அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நேற்று ஆய்வு நடத்தினர்.

இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விஜிலென்ஸ் அலுவலர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் நெல் மூட்டைகளை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்டா மாவட்டங்களில் இருந்து வாங்கப்பட்ட நெல்லின் அளவில் இருந்து அரவை ஆலைகளின் முகவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெல் போக மீதமுள்ள நெல் மூட்டைகளை ஒரு வாரத்திற்குள் அரவை ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை முழுமையாக அனுப்பிய பிறகு தான் நெல் மூட்டைகள் குறைகிறதா?, இல்லையா? என தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story