

பாபநாசம்
பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் மண்டல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ரங்கராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில், தாசில்தார் மதுசூதனன், தனி தாசில்தார்கள் பூங்கொடி, சுஜாதா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள், கொடி நாள் வசூல், கோர்ட்டு வழக்குகள் உள்பட பல்வேறு அரசு அலுவலக பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.