மின்மோட்டார் பொருத்தி தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை


மின்மோட்டார் பொருத்தி தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை
x

மின்மோட்டார் பொருத்தி தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு கொண்டபாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர் லோகேஸ்வரி சரத்பாபுவிடம் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அவர், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் மற்றும் நகராட்சி ஆணையர் பரந்தாமன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்பேரில் அப்பகுதியில் ஏற்கனவே இருந்த இரண்டு ஆழ்துளை கிணற்றில் ரூ.1½ லட்சத்தில் இரண்டு மின் மோட்டார் அமைத்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர்.


Next Story