ஆண்டாள் கோவிலில் தூய்மைப்பணி தீவிரம்


ஆண்டாள் கோவிலில் தூய்மைப்பணி தீவிரம்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவிலில் தூய்மைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவிலில் தூய்மைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆடிப்பூரத்திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த ேகாவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இருப்பினும் ஆடி மாதம் ஆடிப்பூரத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

அதேபோல இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா ெதாடங்குகிறது. 22-ந் தேதி ேதரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான தேர் தயார் செய்யும் பணி கடந்த 2 மாதமாக தீவிரமாக நடந்து வருகிறது. கோவில் முன்பு பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.

தூய்மைப்பணி

இந்தநிலையில் கோவிலை சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் 14 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தூண்கள், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல கோவிலில் உள்ள ஓவியங்களை சுத்தப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story