உப்புகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்


உப்புகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:45 PM GMT)

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் உப்பூர், திருப்பாலைக்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம், .

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஏராளமான உப்பள பாத்திகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் கோடைகாலம் தொடங்கியதும் மார்ச் மாதத்தில் இருந்தே உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கிவிடும். செப்டம்பர் மாதத்தில் உப்பு உற்பத்தி சீசன் முடிவடைந்து விடும்.

ஆனால் இந்த ஆண்டு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் சீசன் முடிந்த நிலையிலும் உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட ஊர்களில் தொடர்ந்து உப்பு உற்பத்தி பணி நடைபெற்று வருகின்றது.

விலை அதிகரிக்கும்

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. இதனால் உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை பகுதிகளில் பாத்திகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள கல் உப்புகளை பிளாஸ்டிக் சாக்குகளில் பேக்கிங் செய்து லாரி மூலம் நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் உப்பு உற்பத்தியும் இந்தாண்டு அதிகரித்துள்ளதாகவும், விலை ஒரு டன் ரூ.2000 வரை மட்டுமே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மழைக்காலம் தொடங்கிய பின்னரே உப்பின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


Related Tags :
Next Story