சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் பலாத்காரம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காளிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சபரி (வயது 27). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். சபரி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் பள்ளி மாணவியான 13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சபரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் சபரி மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இதையடுத்து சபரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்கத்துல்லா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.


Next Story