ஜெயக்குமார் புரிதல் இன்றி விமர்சனம் செய்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

யார் ஸ்டிக்கர் ஒட்டினார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஜெயக்குமார் புரிதல் இன்றி விமர்சனம் செய்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வது வேடிக்கையானது. எந்த ஒரு திட்டத்தையும் புரிதல் இன்றி விமர்சனம் செய்யக்கூடாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மா கிளினிக் தொடங்கினார்கள், ஆனால் அது மக்களுக்கான திட்டமாக இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக புகார் கூறுகின்றனர், இது வேடிக்கையானது.

கடந்த ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள் என்பதை ஜெயக்குமார் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட எத்தனையோ திட்டங்கள் அதிமுகவினரால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. யார் ஸ்டிக்கர் ஒட்டினார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.

பழமைவாய்ந்த ஒரு நூற்றாண்டு மருத்துவமனை, அரசு சைதாப்பேட்டை மருத்துவமனை. சைதாப்பேட்டை மருத்துவமனையை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. ரூ. 26 கோடி மதிப்பில் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com