விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு


விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
x

விவசாயி வீட்டில் நகை-பணம் திருடப்பட்டுள்ளது.

கரூர்

அரவக்குறிச்சி பொன்நகரை சேர்ந்தவர் விவசாயி நல்லசாமி. இவர் சம்பவத்தன்று வெளியூருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை செய்யப்பட்டது. இந்த திருட்டு சம்பம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story