சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com