ஓடும் பஸ்களில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

ஓடும் பஸ்களில் 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓடும் பஸ்களில் 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி தங்க ராஜலட்சுமி (வயது 35). இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று வண்ணாா்பேட்டையில் இருந்து நெல்லை சந்திப்புக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள், ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க நகையை பறித்து சென்றுவிட்டனர்.
வலைவீச்சு
இதேபோல் பாளையங்கோட்டை கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த சுரேந்திரன் உடையார் மனைவி ஜெயலட்சுமி. இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் இருந்து ஊருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். இவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துசென்று விட்டனர்.
இந்த சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.






