பி.எஸ்.என்.எல்.க்கு கிடைக்காத 5-ஜி சேவை ஜியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி


பி.எஸ்.என்.எல்.க்கு கிடைக்காத 5-ஜி சேவை ஜியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி
x

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி, 5ஜி இணைப்பை மத்திய அரசு தரவில்லை என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது முன்னாள் பிரதமர் நேருவை பற்றி பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மோடி அவர்களே..! அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4-ஜி, 5-ஜி இணைப்பை உங்களுடைய மத்திய அரசு தரவில்லை. ஆனால் உங்களுடைய நண்பர் ஜியோவிற்கு (அம்பானிக்கு) மட்டும் 5-ஜி கொடுத்திருக்கிறீர்கள். இந்திய தேசத்திற்கு உங்களை விட சேவை புரிந்தவர்கள் வேறு யார் இருக்க முடியும்?!

இந்த போட்டியில் நேரு அவர்களையோ, இந்திரா காந்தி அவர்களையோ உங்களோடு சேர்க்க முடியாது தான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



1 More update

Next Story