காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு..!
காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்றார். அப்போது காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பணிக்கு சில மருத்துவர்கள் வராதது தெரியவந்தது. அதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் யாரே ஒருவர் போல் தொலைபேசியில் கால் செய்து அவர்களிடம் பேசினார். இதையடுத்து பணிக்கு வராத மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அமைச்சர் திடீரென ஆய்வுக்கு வந்த சம்பவம், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story