கண்டனூர் கோவில் கும்பாபிஷேகம்
கண்டனூர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் 190 ஆண்டுகள் பழமையான செல்லாயி அம்மன் சுந்தரேசுவரர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா கடந்த 5-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. சாமிக்கும் அம்பாளுக்கும் 9 குண்டங்கள் அமைக்கப்பட்டு 6 கால யாக சாலை பூஜைகள் நடந்தது.
யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகசாலை பூஜையில் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கும்பாபிஷேக நிகழ்வில் மதுரை ஆதீனம், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா செல்லப்பன், தி.மு.க. நகர தலைவர் பிரமையா, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அப்பாவு ராமசாமி, அறங்காவலர்கள் முருகப்பன், அழகப்பன், காசி, ராமநாதன், சோ.வைரவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.