வீடுகளுக்கு நேரில் சென்று நகர்மன்ற தலைவர், ஆணையாளர் வரி வசூல்


வீடுகளுக்கு நேரில் சென்று நகர்மன்ற தலைவர், ஆணையாளர் வரி வசூல்
x
திருப்பூர்


காங்கயம் நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்களை நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் நேற்று காலை வீடுகளுக்கே நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனர்.

சொத்துவரி, குடிநீர் கட்டணம்

காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று வரியினங்களை செலுத்துமாறு அறிவுறுத்தியும் வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில், 3 வருட நிலுவையில் உள்ள குடிநீர்க் கட்டணங்களை செலுத்தாத சுமார் 50 குடியிருப்புவீடுகளுக்கு நேரில் சென்று நகர்மன்ற தலைவர், ஆணையாளர் வரி வசூல்வீடுகளுக்கு நேரில் சென்று நகர்மன்ற தலைவர், ஆணையாளர் வரி வசூல்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். வாடகை செலுத்தாத நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த கடைகளை சீல் வைத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நகர்மன்ற தலைவர்,ஆணையாளர் வரி வசூல்

இந்த நிலையில் நகர்மன்றத் தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் மற்றும் நகராட்சி வருவாய் அலுவலர்கள் நேற்று காலை 7 மணியளவில் காங்கயம் நகராட்சி, 4-வது வார்டுக்கு உட்பட்ட சத்திரம் வீதி, முஸ்லீம் வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 50 வீடுகளில் சொத்துவரி, குடிநீர்க் கட்டணமாக ரூ.40 ஆயிரம் வசூலானது. அப்போது நகராட்சி வருவாய் ஆய்வாளர், வார்டு கவுன்சிலர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story