திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி


திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
x
தினத்தந்தி 27 Feb 2023 8:30 PM GMT (Updated: 27 Feb 2023 8:30 PM GMT)

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே வெல்பர் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, திண்டுக்கல் வாழைக்காய்பட்டி பிரிவு அருகேயுள்ள கென்னடி பள்ளியில் நடந்தது. போட்டிகள் ஆண், பெண் இரு பிரிவுகளின் அடிப்படையில் நடைபெற்றது. மேலும் போட்டிகள் கட்டா மற்றும் சண்டை ஆகிய இரு சுற்றுக்களாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் திண்டுக்கல், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று விளையாடினர். போட்டியை தலைமை நடுவர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வெற்றிபெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே வெல்பர் சங்க தலைவர் நம்பிராஜ், செயலாளர் சிவசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story