தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் - கே.எஸ்.அழகிரி பேட்டி


தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் - கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 2 Oct 2023 10:25 AM GMT (Updated: 2 Oct 2023 10:31 AM GMT)

தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தில் பாஜகவினர்தான் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். கர்நாடக மக்கள் பிரச்சினையை உருவாக்கவில்லை. அங்குள்ள மற்ற அரசியல் கட்சிகளும் பிரச்சினையை உருவாக்கவில்லை.

காவிரியில் தண்ணீர் திறக்க அம்மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தபோது, தமிழக காங்கிரஸ் சார்பில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தமிழக அரசின் பக்கம் நாங்கள் நிற்கிறோம். தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை சட்டப்படி கொடுக்கும். கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழக அரசும் கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரைக் கேட்டுப் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story