கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்றவர் கைது
வீட்டில் பதுக்கி வைத்து கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் இன்று காலை அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
யுவராஜ் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது அவரது வீட்டில் 32 கர்நாடக மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்குப்பதிந்து யுவராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story