கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

தொரடிப்பட்டு ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கல்வராயன்மலையில் உள்ள தொரடிப்பட்டு ஊராட்சி முண்டியூர் கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கல்வராயன்மலை தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், துணை தலைவர் பாச்சாபீ ஜாகீர் உசேன், வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் அசோக்குமார் வரவேற்றார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன், தலைமைக்கழக பேச்சாளர் காமராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்லதுரை, ஊராட்சி தலைவர் செல்வராஜ், துணை தலைவர் சித்ரா சந்திரவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






