கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு


கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
x

விழுப்புரத்தில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன், மைதிலி ராஜேந்திரன், நகர செயலாளர் சக்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக காந்தி சிலை, நான்கு முனை சிக்னல், புதிய பஸ் நிலையம் வழியாக கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தனர். பின்னர் அங்குள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலைக்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், மும்மூர்த்தி, பிரபாகரன், தெய்வசிகாமணி, வேம்பிரவி, நகர சபை தலைவர் தமிழ்செல்வி பிரபு, ஒன்றியக்குழு தலைவர்கள் கலைச்செல்வி, வாசன், சங்கீதஅரசி, சச்சிதானந்தம், மீனாட்சி ஜீவா, நகர சபை துணைத் தலைவர் சித்திக்அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் தினகரன், மாணவர் அணி செயலாளர் ஸ்ரீ வினோத், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோல்டு வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story