"நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி" - கோபாலகிருஷ்ண காந்தி பேச்சு

நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி எனறு மகாத்மா காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கூறினார்.
"நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி" - கோபாலகிருஷ்ண காந்தி பேச்சு
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது:-

அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறி பொது வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன் என கருணாநிதி எழுதினார். நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. இன்றைய இளம் அமைச்சர்களுக்கும், அவருடைய பேரன் உதயநிதி ஸ்டாலினுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை. கருணாநிதி சன்னதியில் உண்மையை பேச வேண்டும். தற்போது, இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை. பேரன்களுக்கு பெயருண்டு, அந்த பெயரை காப்பாற்றுவது பெரிய வேலை. தான் ஒரு சாதாரண மனிதன். அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com