கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு வந்தன

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு வந்தன
Published on

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு வந்தன.

கன்றுக்குட்டிகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 70 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது. இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், கோவை, நாமக்கல், திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

650 மாடுகள்

350 பசு மாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும் விலை போனது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றனர். வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் நேற்று கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com