கரூர்: பகவதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்

சுமார் 10 டன் எடையுள்ள மர தேரை பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி தோளில் சுமந்து சென்றனர்.
கரூர்: பகவதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மலையாள பகவதி அம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. சுமார் 10 டன் எடையுள்ள மர தேரை பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி தோளில் சுமந்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகளில் தேர் உலா வந்த நிலையில், திரளான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com