கெலமங்கலம் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ் ஏட்டு பலி

கெலமங்கலம் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ் ஏட்டு பலி
Published on

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் ஏட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). மத்திகிரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கெலமங்கலம் போலீஸ் நிலைய குற்ற வழக்கு தொடர்பாக தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிப்பதற்காக மோட்டார்சைக்கிளில் வந்து விடடு மீண்டும் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார்.

கெலமங்கலம் அருகே உள்ள பாரந்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர்கள், கணேசன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிளை முந்தி செல்ல முயன்றனர்.

விபத்தில் பலி

அப்போது மோட்டார்சைக்கிள்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் போலீஸ் ஏட்டு கணேசன் கீழே விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் மீது மோதிய நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போலீஸ் ஏட்டுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com