ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு மகளுடன் வந்த கிம் ஜாங் அன்..!


ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக்கு  மகளுடன் வந்த கிம் ஜாங் அன்..!
x
தினத்தந்தி 27 Nov 2022 5:45 AM GMT (Updated: 27 Nov 2022 5:53 AM GMT)

வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் அன் மகளுடன் பொதுவெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் விவாதிக்கப்படுகிறது.

சியோல்,

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். தனது நாட்டைப்போலவே தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் ரகசியம் காத்து வரும் வடகொரியா அதிபர் கிம் ஜான் அன், முதல் முறையாக தனது மகளான ஜூ ஏவுடன் வருகை தந்தது உலக அளவில் கவனம் பெற்றது.

வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக மகளை அறிமுகப்படுத்த தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கிம் ஜாங் அன் மகளுடன் பொதுவெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக கிம் ஜாங் அன் தனது மகள் ஜூ ஏவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது தனது மகளுடன் கிம் ஜாங் அன் பங்கேற்று இருக்கிறார். 9 அல்லது 10 வயது இருக்கலாம் என்று கருதப்படும் ஜுஏ, கிம் ஜாங் அன் மிகவும் நேசத்திற்குரிய மகள் என்று வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் அன்னுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கலாம் என்று தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு மகன், இரு மகள்கள் இருக்கக் கூடும் என்றும் தற்போது பொதுவெளியில் தெரியவந்து இருப்பது கிம் ஜாங் அன்னின் 2-வது மகள் என்றும் தென்கொரிய ஊடகங்கள் கூறுகின்றன.


Next Story