அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்த கே.என்.நேரு..!


அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்த கே.என்.நேரு..!
x
தினத்தந்தி 26 Nov 2023 8:59 AM GMT (Updated: 26 Nov 2023 9:41 AM GMT)

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை போட்டுவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சென்னை,

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த கே.என்.நேருவிடம், அவர் போட்டிருந்த கருங்காலி மாலையைப் பற்றி ஐ.பெரியசாமி கேட்டார். அப்போது தான் அணிந்திருந்த வெள்ளி கருங்காலி மாலையை ஐ.பெரியசாமி கழுத்தில் கே.என்.நேரு போட்டுவிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை போட்டுவிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


Next Story