108 சங்காபிஷேகம்


108 சங்காபிஷேகம்
x

திருப்பத்தூர் ஆதித்திருத்தளிநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் மிகப்பழமையானதும் தொன்மை வாய்ந்த கோவிலுமான மேலக்கோவில் என்று அழைக்கப்படும் ஆதித் திருத்தளிநாதர் கோவில் கார்த்திகை திங்கட்கிழமை சோமவார திங்களாக கடைபிடிக்கப்பட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டின் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு யாகபூஜையுடன் நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால் மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜாப்பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது.

பின்னர் பிரதோஷம் என்பதால் நந்தீஸ்வரருக்கு பால், தயிர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப் பட்டது. சிவாச்சாரியார்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு கலசங்களுக்கு பூைஜயும் யாகவேள்வி பூர்ணாகுதி நடைபெற்று மூலவரான சிவனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீர் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சி அளித்தார்.

ராமு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேள்வி மற்றும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர்.

இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், சுற்றுப்புற கிராமத்தினர் திரளான அளவில் கலந்து கொண்டனர். விழா முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.

1 More update

Next Story