கோவில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை


கோவில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்லடம் அருகே நாரணாபுரம் கல்லம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 100 ஆண்டு பழமையான மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. அருகில் நிலம் உள்ளது. இந்தநிலையில் கல்லம்பாளையத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக, நாங்கள் பயன்படுத்தி வந்த கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். எங்கள் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் கோவில் அருகே குட்டை போல் தேங்கியுள்ளது.

ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட இடத்தில் எங்களுக்கு சமுதாயநலக்கூடம் அமைக்க உதவ வேண்டும் என்றுகூறியுள்ளனர்.

1 More update

Next Story