வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா


வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா
x

சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது.

கடலூர்

சிறுபாக்கம்,

சிறுபாக்கத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று இரவு கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வரதராஜ பெருமாள் மற்றும் சஞ்சீவிராயர் ஆகிய சாமிகளுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலின் முன்பு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், இரவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story