கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட இந்த கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் தற்போது 50 அடியை தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 1,114 கனஅடி நீர் வரும் நிலையில் 1,176 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைபோல தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com